Roadwork Contractor Checking the Income Tax Department at home
தமிழக அரசின் சாலைப்பணி ஒப்பந்ததாரர் தியாகராஜனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல மணி நேரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் சாலைப்பணி ஒப்பந்ததாரராக தியாகராஜன் இருந்து வருகிறார். இவர் மீது வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகவும், வருமானத்தை குறைத்து காண்பித்ததாகவும் புகார் ஏழுந்தது.
இந்த புகாரை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தியாகராஜனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் தியாகராஜனுக்கு சொந்தமான 3 நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை பல மணி நேரமாக நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
வருமானத்தை குறைத்து காண்பித்தல் மற்றும் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது குறித்த ஆவணங்கள் கைப்பற்ற பிறகே இது குறித்து முழுமையான தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
