Asianet News TamilAsianet News Tamil

வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டும் வருவாய்த்துறை அதிகாரிகள்…

revenue officials-are-threatening-to-leave-the-house
Author
First Published Dec 17, 2016, 10:54 AM IST


கூடலூரில் பூட்டி "சீல்' வைக்கப்பட்ட வீட்டிலிருந்த ரூ.5 இலட்சம் மதிப்பிலான பொருள்கள் எடுத்துக்கொண்டு வீட்டின் உரிமையாளையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டும் வருவாய்த் துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வீட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அளித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தொரப்பள்ளி பகுதியில் வசிக்கும் சித்திக் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

“கடந்த ஐந்து வருடங்களாக நான் வசித்து வந்த வீடு அனுமதியின்றி கட்டப்பட்டது என்று கூறி, ஐந்து மாதங்களுக்கு முன் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் பூட்டி "சீல்' வைத்தனர். 

நகராட்சி, மின்சார வாரியம் ஆகியவற்றில் அனுமதி பெற்றுக் கட்டிய வீட்டைப் பூட்டி "சீல்' வைத்ததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி, மாரடைப்பு ஏற்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளேன். 

எனது வீடு "சீல்' வைக்கப்பட்டது தொடர்பாக கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரை குடும்பத்துடன் சென்று நேரில் சந்தித்து முறையிட்டேன்.

ஆட்சியரின் அறிவுறுத்தலால் கூடலூர் வட்டாட்சியர் அப்துல் ரஹ்மான் கடந்த 20 நாள்களுக்கு முன் என்னைத் தொடர்பு கொண்டு கட்டடத்தின் சாவியைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.

பிறகு வீட்டைத் திறந்து பார்த்தபோது, அதிலிருந்த டி.வி, கட்டில்கள், மெத்தை உள்ளிட்ட ரூ. 5 இலட்சம் மதிப்பிலான பொருள்களைக் காணவில்லை.

அதுதொடர்பாக வட்டாட்சியரை தொடர்புகொண்டு முறையிட்டபோது, பத்து நாள்களுக்குள் காணாமல் போன பொருள்களைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். எனவே இதுவரை காத்திருந்தேன்.

இந்த நிலையில் டிசம்பர் 14-ஆம் தேதி நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது வீட்டினுள் வருவாய்த் துறையினர் அத்துமீறி நுழைந்துள்ளனர். நான் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த 3 பவுன் தங்க நகையைக் காணவில்லை.

கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி எனது வீட்டுக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் வீட்டைவிட்டு வெளியேறுமாறு மிரட்டிச் சென்றுள்ளார்.

ஏற்கெனவே மாரடைப்புக்காக சிகிச்சை பெற்று வரும் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இதனால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், எனது வீட்டில் காணாமல் போன பொருள்களை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios