Asianet News TamilAsianet News Tamil

ரூ.8000 கோடியை கடந்தது பதிவுத்துறை வருவாய்… அமைச்சர் பி.மூர்த்தி தகவல்!!

பதிவுத்துறை வருவாய் எட்டாயிரம் கோடியை கடந்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். 

revenue of the registration dept has crossed 8 thousand crores says minister moorthy
Author
First Published Sep 22, 2022, 8:16 PM IST

பதிவுத்துறை வருவாய் எட்டாயிரம் கோடியை கடந்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக ஆவணங்கள் பதிவு அதிகரித்து அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பதிவு செய்ய வருவோரை ஆதார் எண் மூலம் சரி பார்த்தல், வரிசைக் கிரம டோக்கன் முறை, சரியான நிலமதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பதிவு சேவைக்காக இத்துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு .. ரூ. 20,000 சம்பளத்தில் சூப்பர் வேலை.. தேர்வு கிடையாது..

அனைத்திற்கும் மேலாக கடந்த காலங்களில் நடந்த மோசடி பதிவுகளின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணப்  பதிவுகளை பதிவுத் துறையே ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறைப்படுத்துவதை முதலமைச்சர் எதிர்வரும் 28.09.2022 ஆம் தேதி துவக்கி வைக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: வாணிப தொடர்பு குறித்து பறைசாற்றும் தொல் பொருட்கள்.. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுப்பு

இந்த பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21.09.2022 வரை 16,59,128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 8,082 கோடி வருவாயாக  ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே நாளில் எட்டப்பட்ட 5,757 கோடி ரூபாயை விட 2,325 கோடி ரூபாய் அதிகமாகும் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios