கன்னியாகுமரி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாகர்கோவில் இராணித் தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் பத்மனாபபிள்ளை தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் தங்கப்பன் வரவேற்று பேசினார். பிரான்சிஸ் சேவியர், வெங்கடாச்சல மூர்த்தி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு பொருளாளர் சைமன், சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

இந்தப் போராட்டத்தில், "மாதந்தோறும் 1–ஆம் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும், 

1–1–2016 முதல் அகவிலைப்படி உயர்வை நிலுவைத்தொகையுடன் உடனே வழங்க வேண்டும், 

ஊதிய ஒப்பந்தப்படி 1–9–2003–ல் இருந்து 31–8–2016 வரை நிலுவையில் உள்ள 30.5 சதவீத அடிப்படை ஓய்வூதிய உயர்வை நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 

இதில், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஐயாத்துரை உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினார். முடிவில் மரியதாசன் நன்றித் தெரிவித்தார்.