கன்னியாகுமரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தர்னா  போராட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரி ஜீவா சிலை முன்பு மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தர்னா போராட்டம் நடைப்பெற்றது. 

இந்தப் போராட்டத்திற்கு ஒருங்கிணைப்புக்குழு  மாவட்டத் தலைவர் பி.ராஜநாயகம் தலைமை வகித்தார். 

இதில், "உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கிணங்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமல்படுத்த வேண்டும், 

சுற்றுசூழலையும், மண் வளத்தையும், நிலத்தடி நீராதாரத்தையும், மக்களின் சுகாதாரத்தையும் பாதிக்கின்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில், எஸ்.சுப்பிரமணியன், அமல்ராஜ், சி. ஐயப்பன், எஸ்.பாலசுந்தர்ராஜ்,  ஏ.மீனாட்சிசுந்தரம், சந்திரகாந்த், ஜெயச்சந்திரன், பிரான்சிஸ், ஞானஆசீர்வாதம்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.