restriction for bathing in the cutralam about Flooding

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதையடுத்து கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதியே கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை குற்றாலத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடனையே திரும்பினர்.

ஆனால் தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழையால் குற்றாலமே வெள்ளப்பெருக்கால் அலைமோதுகிறது.

குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது.

சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை நாட்களை ஒட்டி குற்றாலத்தில் கூட்டம் அலைமோதியது. ஆனாலும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடனே ஊர் திரும்புகின்றனர்.