ஆட்டோவில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  

இதுகுறித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில்,” தமிழக அரசு போக்குவரத்து இணை ஆணையாளர் தலைமையில் ஆட்டோ மீட்டர் கட்டணம் மறு நிர்ணயக்குழு அமைத்து அரசாணை வெளியிட்டது.

மேலும் படிக்க:திமுகவிற்கு இலவச சட்ட ஆலோசனை தருபவர் கி.வீரமணி..! திராவிடர் கழகத்தை நக்கல் செய்த வி.பி.துரைசாமி

இந்த குழு கடந்த மாதம் 12ம் தேதி ஆட்டோ சங்க பிரதிநிதிகள் கூட்டம் நடத்தியது. அதில் அனைத்து சங்கங்களும் மினிமம் ₹50, மேலும் ஒவ்வொரு கி.மீ. ₹25 என அரசை வலியுறுத்தினோம். இந்த குழு பயணிகள் நலச்சங்கங்களின் பிரதிநிதிகளிடமும் கருத்து கேட்டுஅரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் புதிய மீட்டர் கட்டணம் குறித்து அரசு தரப்பில் அரசாணை வெளியாகவில்லை.

மேலும் படிக்க:AIADMK : ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்.. தர்மயுத்தம் 2.0 - எடப்பாடி எடுத்த கடைசி அஸ்திரம் ! கைகொடுக்குமா ?

தமிழக அரசு ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டு ஆட்டோ தொழிலை, ஓட்டுநர்கள் வாழ்வை பாதுகாக்க முன்வர வேண்டும். மேலும், அரசு சார்பில் உரிய முறையில் ஆட்டோ ஆப் துவக்க வேண்டும். இலவச ஜிபிஆர்எஸ் மீட்டர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.