சென்னையில் ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட வங்கியின் முக்கிய அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர்.

ரெப்கோ வங்கியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு 43 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்றிரவு முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநர் வரதரஜானின் அடையாறு வீட்டில் சி.பி.ஐ.அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வங்கியின் தி.நகர் கிளை மேலாளர் சேகர் மற்றும் அசோக் நகர் கிளை மேலாளர் கண்ணன் ஆகியோரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இரவு முழுவதும் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.