திருவண்ணாமலை

அரசு ஊழியர்களுக்கு, மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் கங்காதரன் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவர் கங்காதரன் தலைமை தாங்கினார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

“அரசு ஊழியர்களுக்கு, மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்துவிட்டு, பழைய ஒய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்,

கம்டேஷன் பிடித்தத்தை, 15 ஆண்டிலிருந்து, 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு, தேர்வுநிலை சிறப்பு நிலை வழங்குவதில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும்”

போன்ற கோரிக்கைகளை அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.