களையங்கட்டி அருகே குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

காரைக்கால் - திருநள்ளாறு சாலையில் களையங்கட்டி பாலம் அருகே ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 குடிசை வீடுகள் எரிந்து நாசமானது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், வேட்டி, சேலைகள் போன்ற நிவாரண பொருட்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.யு. அசனா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட னர்.

இதே போல் காரைக்கால் அஞ்சுமன் இஸ்லாமியா சங்க நிர்வாகிகள் நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாய், தலையணை மற்றும் சமையல் பாத்திரங்களை வழங்கி ஆறுதல் கூறினர்.

இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ஆடிட்டர் சாகுல் அமீது, பேராசிரியர் லியாக்கத் அலி, முகமது கவுஸ், முகமது தாஹிர், ஜெகபர் மரைக்காயர், முகமது செரீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.