Asianet News TamilAsianet News Tamil

விபத்தில் இறந்த காவலரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம்.. ஒருவருக்கு அரசுப்பணி.. முதலமைச்சர் அறிவிப்பு..

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கருனை அடிப்படையில் 2 போலீசாரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 

Relief fund for the family of the policemen who died in the accident - Chief Minister Announcement
Author
Tamilnádu, First Published Jun 12, 2022, 11:54 AM IST

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கருனை அடிப்படையில் 2 போலீசாரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

நாமக்கல்‌ மாவட்டம்‌, புதுச்சத்திரம்‌ தேசிய நெடுஞ்சாலை அருகே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கார்‌ விபத்து தொடர்பாக விசாரிப்பதற்காக, இரவு பாதுகாப்புப்‌ பணியில்‌ காவல்துறையினர் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை அதிவேகமாக வந்த சுற்றுலா வேன், போலீசார் மீது மோதியதில் சம்பவ இடத்திலே சிறப்பு காவல்‌ உதவி ஆய்வாளர்‌ சந்திரசேகர்‌, காவலர்‌ தேவராஜன்‌ ஆகியோர்‌ பரிதாபமாக உயிரிழந்தனர்‌.

இச்சம்பவத்தில்‌ காயமடைந்த மற்றொரு காவலர்‌ மணிகண்டன்‌ மற்றும்‌ சுற்றுலா வேனில்‌ பயணம்‌ செய்த 3 பேர்கள்‌ ராசிபுரம்‌ அரசு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்‌.
இந்நிலையில்‌, விபத்து குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌, இச்சம்பவத்தில்‌ உயிரிழந்த சிறப்பு காவல்‌ உதவி ஆய்வாளர்‌ சந்திரசேகர்‌, காவலர்‌ தேவராஜன்‌ ஆகியோரின்‌ குடும்பத்திற்கு  தொலைபேசியில்‌ தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலைத்‌ தெரிவித்துக்‌ கொண்டார்‌.

மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்த காலவர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோருக்கு, உயர்தர சிகிச்சை வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்.. இந்து சமய அறநிலையத்துறை எடுத்த அதிரடி முடிவு ! பிரச்னை ஓயுமா ?

Follow Us:
Download App:
  • android
  • ios