regarding up train accident conveyed rip by kamal

உத்தரபிரதேசத்தில் பூரி - ஹரித்துவர் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 23 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். . சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கு நடிகர் கமல் ஹாசன், இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பூரி - ஹரித்வார் - கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில், முசாபர் நகர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. 

இந்த விபத்தை அடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை வாரியப் படைகள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.