பொங்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் Red-Bus என்னும் மொபைல் ஆப் மூலம் புக் செய்த டிக்கெட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்திருக்கின்றனர் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து உறிமையாளர்களிடம் ஜன 12 முதல் 17 வரை அதாவது பொங்கல் தொடங்கி முடியும் வரை புக் செய்த டிக்கெட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை பொங்கல் பண்டிகையை யொட்டி சுமார் 2 லட்சம் பேர் ரெட் பஸ் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட் மூலம் தங்கள் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கமாட்டோம் என அறிவிக்கிறார் ஆம்னி பேருந்துகள் சங்க தலைவர் பாண்டியன்.

மேலும் ரெட் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தவர்கள் பயணம் செய்ய வேண்டுமானால் தங்களுடைய புக்கிங் என்னை காண்பித்து அதற்கான பணத்தை தங்களிடமே கொடுக்கவேண்டும் என்று டிமாண்ட் செய்கிறார்கள் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்.

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் ரெட் பஸ் மொபைல் ஆப் நிறுவனத்திற்கும் இடையே நடக்கும் மோதலில் சுமார் ரெண்டு லட்சம் பயணிகள் பாதிப்புள்ளாகும் ஆபத்து உள்ளது.

இந்த அறிவிப்பு தற்காலிகம்தான் என்றும் தங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை ரெட் பஸ் நிறுவனத்தை சரியாக கொடுத்துவிட்டால் தங்களது நிலைபாட்டை மாற்றி கொளவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார் ஆம்னி பஸ் சங்கத்தின் துணை தலைவர் அன்பழகன்

எது எப்படியோ ரெட் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தவரா நீங்கள்?

உடனடியாக உங்கள் இருக்கையை சம்பந்தப்பட்டவரிடம் பேசி உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.