தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.  தமிழத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கும் என எச்சரித்துள்ளது.

தமிழகத்திற்கு வரும் 7ந் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வரும் 7ந் தேதி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை 7ந் தேதி தமிழகத்தில் 25 செ.மீக்கு மேல் மழை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், கனமழை கொட்டித் தீர்த்திருந்தது. ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்கு கொடுக்கப்பட்டது போல அக்டோர் 7ந் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மிக தீவிரமாக கனமழையை எதிர்பார்க்கும் போது ரெட் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அக்டோபர் 7ந் தேதி அதிகனமழையை எதிர்கொள்ள தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் நிலையில் உள்ளது. குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்த சமயத்தில், சாலை போக்குவரத்து பாதிப்பு, மின்சார துண்டிப்பு, என பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. அக்டோபர் 7ந் தேதி அதிகனமழையை எதிர்கொள்ள தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் நிலையில் உள்ளது.