REAL ESTATE GETTING BUSY IN OMR
சூடு பிடிக்கும் ரியல் எஸ்டேட்... 'OMR' இல் ஆர்வம் காட்டும் மக்கள்...!
கடந்த சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் துறை முடங்கி கிடந்தது.
அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், இடையில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் GST உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ரியல் எஸ்டேட் துறை சாற்றி எழுச்சி கண்டு வருகிறது.
மண்ணில் போடும் காசுக்கு என்றுமே, பயன் உண்டு என்பதற்கு ஏற்ப நிலத்தில் முதலீடு செய்வதில் தான் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
அதிலும் குறிப்பாக, சென்னையை பொறுத்தவரை 'OMR' இல்,வீடு என்றால் நினைத்து கூட பார்க்க முடியாது என்ற அளவிற்கு,வெளிநாட்டில் உள்ளது போல தோற்றம் காணப்படுகிறது,
காரணம் அங்கு அதிக அளவில் கட்டப்பட்டு வரும் மிக உயரிய கட்டிடம் மற்றும் வளர்ந்து வரும் IT .அதாவது சாப்ட்வேர் கம்பெனி...
கூடுதல் காரணம்
'OMR' இல் இடம் இருந்தாலே கோடீஸ்வரர்கள் தான்
இங்கு ஒரு FLAT வாங்கி வாடகை விட்டாலே போதும்,குறைந்தபட்சம் 25 ஆயிரம் பெற முடியும்,
பெருகி வரும் சாப்ட்வேர் நறுவனத்தால்,வேலை வாய்ப்பு அதிகமாகும்.. சம்பளம் அதிகம் வாங்கும் சாப்ட்வேர் ஊழியர்கள்,அதிநவீன வசதி படைத்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் தங்குவர்.
'OMR' இல் செல்லோம் போதே தெரியும், விண்ணை தொடும் கட்டிடங்கள்...
சாலை வசதியோ சூப்பரோ சூப்பர்.....
அதற்கு அடுத்தபடியாக ECR உள்ளது .'OMR' இல் சம்பாதிப்பதை, ECR செலவிட பல வர்த்தக நிறுவனங்கள்
பத்தாததிற்கு, அருகிலேயே பீச்....
தி நகரில் உள்ளது போன்றே,மாபெரும் வர்த்தக நிறுவனங்கள்...
மேலும், இடத்தில் மூலதனம் செய்வதால், மிக குறுகிய காலத்திலேயே பன்மடங்கு உயரும் இடத்தின் விலை....
இவையெல்லாம் காரணம் காட்டி தற்போது ரியல் எஸ்டேட் துறை சற்று சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.மேலும் இடம் வாங்கும் ஆர்வத்தில் உள்ள முதலீட்டாளர்கள் அல்லது சொந்த இடம் வாங்க நினைப்பவர்கள் தேர்வு செய்யும் இடமாக உள்ளது OMR.
