Asianet News TamilAsianet News Tamil

Ration Shop: ரேஷன் பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.!

 திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து அடிக்கடி பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி புது அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

Ration items to be sold in packets soon
Author
Chennai, First Published May 27, 2022, 11:49 AM IST

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ரேஷன் பொருட்கள் குறித்து பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியான நிலையில் மற்றொரு அறிவிப்பை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம்  அரிசி, பருப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து அடிக்கடி பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி புது அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

Ration items to be sold in packets soon

இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றொரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சக்கரபாணி;- அரிசி கடத்தலை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பயோமெட்ரிக் முறையால் ரேசன் கடைகளில் தவறுகள் நடப்பது குறைந்துள்ளது.

Ration items to be sold in packets soon

 மேலும் ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால், அதுகுறித்து 1967 என்ற எண்ணுக்கும், 1800 425 5901 என்ற எண்ணுக்கும் அழைத்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். குறிப்பாக ரேஷன் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios