கண்மூடித்தனமாக காரை ஓட்டி இருவரை இடித்துத் தள்ளியவருக்கு தருமஅடி; நிறுத்தமால் சென்றவருக்கு பொதுமக்கள் புகட்டிய பாடம்...
திருநெல்வேலியில், கண்மூடித்தனமாக காரை ஓட்டிவந்தவர் இருவரை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். அவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் தருமஅடி கொடுத்தனர். பின்னர், காவல்துறைக்கு தகவல் கொடுத்து வரவழைத்து காரை ஓட்டிவந்தவரை ஒப்படைத்தனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலியில், கண்மூடித்தனமாக காரை ஓட்டிவந்தவர் இருவரை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். அவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் தருமஅடி கொடுத்தனர். பின்னர், காவல்துறைக்கு தகவல் கொடுத்து வரவழைத்து காரை ஓட்டிவந்தவரை ஒப்படைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரத்தில் வசிப்பவர் வேலாயுதம். இவர் நேற்று மாலை தனது காரில் தச்சநல்லூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்துக் கொண்டிருந்தார். காரை படுவேகமாகவும், கண்மூடித்தனமாகவும் ஓட்டிவந்த வேலாயுதம், உடையார்பட்டி என்னும் பகுதி அருகே வந்தபோது அங்கு சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தவை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.
அங்கிருந்து பைபாஸ் சாலையில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே மின்னல் வேகத்தில் கார் ஓட்டிவந்த வேலாயுதம் அந்தப் பகுதியில் பைக்கில் வந்த ஒருவரையும் படுவேகமாக இடித்துத் தள்ளினார். இங்கும் வேலாயுதம் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டார். இதனைப் பார்த்த பைக்கில் நின்றுக் கொண்டிருந்த இளைஞர்கள் காரை விரட்டிச் சென்று வேலாயுதத்தை மடக்கினர். பின்னர் அவர்கள் வேலாயுதத்திற்கு தருமஅடி கொடுத்தனர். இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் செல்கிறாயா? என்று அடி வெளுத்தனர்.
பின்னர், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை வருவதற்கு தாமதமானதால் உடையார்பட்டி மக்கள் உடனே சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பின்னரே திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவுக் காவலாளர்கள் வந்தனர். அவர்கள் வேலாயுதத்தை கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டுச் சென்றனர்.
அதன்பிறகே உடையார்பட்டி மக்களும் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்தனர். வேலாயுதம் இடித்துத் தள்ளியதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரௌண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின்னல் வேகத்தில் காரை ஓட்டிவந்து இருவரை இடித்துத் தள்ளியவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தருமஅடி கொடுத்து பாடம் புகட்டிய சம்பவம் இந்தப் பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.