ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் - அமைச்சர் எ.வா. வேலு அறிவிப்பு
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னார் மற்றும் காங்கேஸ்வரத்துறை ஆகிய இடங்களுக்கு பயணிகள் கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வா. வேலு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார். அப்போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ரூ.1093 கோடி ஒதுக்கப்படுவது உள்ளிட்ட பல திட்டங்கள் பற்றித் தெரிவித்துள்ளார்.
முக்கிய மாநில நெடுஞ்சாலைகளில் 3 இடங்களில் சாலையோர வசதி மையங்கள் பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் அமைக்கப்படும். பள்ளங்களற்ற சாலைகளை உருவாக்கும் போக்கில் சாலையில் ஏற்பட்டுள்ள பழுது பற்றிய தகவல்களை பொதுமக்களிடமிருந்தே பெற்று குறிப்பிட்ட நாட்களுக்குள் அவை சரிசெய்யப்படும். அதற்காக கைபேசி செயலி ஒன்று உருவாக்கப்படும்.
2030க்குள் மனிதர்களின் மரணத்தைத் தடுக்கும் நானோ ரோபா! முன்னாள் கூகுள் விஞ்ஞானி குர்ஸ்வேல் தகவல்
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கும், காங்கேஸ்வரத்துறைக்கும் கப்பல் போக்குவரத்து வசதியைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 238 கோடி செலவில் 6 மாவட்டங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
சென்னை பெருநகர பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், ரூ.116 கோடி ஒதுக்கி தேவையான இடங்களில் சிறு பாலம் மற்றும் கால்வாய் அமைக்கப்படும். பல்லாவரம், துரைப்பாக்கம், ஆரச்சாலை ஆகிய பகுதிகளை தொழில்நுட்ப விரைவுசாலையாக மாற்றவும் பல்லாவரம் மேம்பாலம் மற்றும் சென்னை புறவழிச் சாலையை இணைக்கும் உயர்மட்ட சாலை அமைக்கவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
2 மணிநேரத்தில் பாலம் ரெடி! 3D பிரிண்டிங் மூலம் அசத்திய ஐஐடி சிவில் மாணவர்கள்!
மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு செல்லும் சாலை ரூ.22.80 கோடி மதிப்பில் அகலப்படுத்தப்படும். ரூ.787 கோடி மதிப்பில் 273 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றவும் ரூ.150 கோடி மதிப்பில் சாலை விபத்துகளை தடுப்பதற்கான சாலை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளில் ஆபத்தான இடங்களில் 100 கோடி மதிப்பில் உருளை விபத்து தடுப்பான்கள் அமைக்கப்படும். 286 கோடி மதிப்பில் துறையூர், திருப்பத்தூர் மற்றும் நாமக்கலில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும். 215.80 கோடி செலவில் 9 மாவட்டங்களில் 13 ஆற்றுப் பாலங்கள் கட்டப்படும். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.
வெப்சைட் மூலம் 67 கோடி பேரின் தகவல்களைத் திருடி விற்ற சைபர் திருடன் கைது