ramanan said about rain in future
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதுமே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வடகடலோர மாவட்டங்களை வாட்டி எடுத்து வருகிறது.
நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் சென்னையில் வேளச்சேரி, சைதாபேட்டை, திநகர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் புறநகர்ப்பகுதிகளான முடிச்சூர், கோவிலம்பாக்கம், மாதவரம், பூந்தமல்லி என சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு சென்னையில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியது:
டெமிரி என்ற புயல் தற்போது வியட்நாம் அருகில் உள்ளது. அந்தப் புயல் வங்கக் கடல் நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்துக்கும் மேலும் மழை பொழிவு இருக்கும். வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பொழிவு இருக்கும். அதேபோல, தென் கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வடகடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பொழிவு இருக்கும் என ரமணன் தெரிவித்துள்ளார். அந்த வகையில், வரும் நாட்களில் சென்னையில் மழை இருக்கும் என்பதால் மக்களை பாதுகாக்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
