நாட்டையே அதிர செய்தது தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐயின் கூட்டு நடவடிக்கை.

வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், ராமச்சந்திர மருத்துவமனையில் படுத்து கொண்டார் ராமமோகன் ராவ். கடந்த 2 நாட்களாக ஓரளவுக்கு செய்ய வண்டிய கடமைகளை செய்து முடித்தபின், இன்று காலை தைரியமாக செய்தியாளர்களை சந்தித்தார் ராம்மோகன்ராவ்.

பேட்டியின்போது ஆவேசமாகவும், ஆக்ரோஷமாகவும் பேட்டியளித்தார். ஒரு உயர் அதிகாரி, அரசியல்வாதிபோல் பேட்டி அளித்தது, அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அடிக்கடி அவர், ஜெயலலிதாவின் பாரம்பரியத்தில் வந்தவன் என்று கூறியபோது, அரசியல்வாதிபோல் பேசுகிறார் என பத்திரிகையாளர்கள் முடிவு செய்துவிட்டனர்.

இடியாப்ப சிக்கலில் சிக்கி கொண்ட ராமமோகன் ராவ், மக்கள் தலைவரான ஜெயலலிதாவை, அடிக்கடி துணைக்கு அழைத்து கொண்டார். பின்னர், மிகப் பெரிய சக்தி வாய்ந்த ஜெயலலிதா இருந்து இருந்தால், இந்த நிலைமை தனக்கு வந்து இருக்காது என்றும், ஜெயலலிதா உயிரோடு இருந்து இருந்தால் எனது வீடு மற்றும் தலைமை செயலகத்தில் நுழைய இவர்களுக்கு தைரியம் இருக்குமா என சவால் விடுத்தார். மேலும், ஜெயலலிதாவின் பயிற்சியில் வந்ததால், நான் இதுபோன்ற ஊழல்களில் ஈடுபடமாட்டேன் என்றும், தெரிவித்தார்.

இதுபோன்ற சிக்கலில், மாட்டி கொண்ட ராமமோகன் ராவ், தற்போது ஜெயலிலிதாவின் பெயரை இழுத்துள்ளதாகவும், அவர் சொன்னதை போல் செய்து வருவதாகவும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.