சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்த தொழில் தொடர்பும் இல்லை. நான் குறி வைக்கப்பட்டுள்ளேன் என ராமமோகன் ராவ் தெரிவித்தார்.

எனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த தொழில் தொடர்பும் இல்லை. என்னை குறி வைத்துள்ளனர். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. துப்பாக்கி முனையில் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

தலைமை செயலர் வீட்டில் சோதனை நடத்தப்படும் போதும், தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்ட போதும் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது. ஒரு தலைமைச் செயலரை பாதுகாக்கவே தமிழக அரசு தவறி விட்டதால், பொது மக்கள் தங்களது பாதுகாப்பு நிலை குறித்து அஞ்சுகிறார்கள்.

மேலும் வருமான வரித்துறை ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினாலும் தனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த வித தொடர்பும் இல்லையென ராம் மோகன ராவ் திட்டவட்டமாக கூறியுள்ளார் .