Asianet News TamilAsianet News Tamil

பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி விடுவார்கள்: ராஜேஸ்வரி பிரியா எச்சரிக்கை!

பிக் பாஸ் நிகழ்ச்சி கலாசார சீர்கேடு என ராஜேஸ்வரி பிரியா விமர்சித்துள்ளார்

Rajeshwari Priya Warns Bigg Boss and criticized season 7 smp
Author
First Published Nov 10, 2023, 6:10 PM IST

பாமகவில் இருந்து விலகி அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வரும் ராஜேஸ்வரி பிரியா, நடிகர் விஜய்யின் லியோ படத்தின்போது பெரும் சர்ச்சையை கிளப்பினார். அப்படத்தில் வரும் பாடல் வரிகளுக்கு தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்த அவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக கொந்தளித்திருக்கிறார்.

தமிழில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சண்டை சச்சரவுகள் நடைபெற்று வரும் நிலையில், கலாச்சாரத்தின் சீர்கேடே பிக்பாஸ் நிகழ்ச்சிதான் என்று ராஜேஸ்வரி பிரியா விமர்சித்திருக்கிறார். நிக்சனும் ஐஸுவும் சேர்ந்து செய்கிற காரியத்தை பார்க்கும் போது கலாசாரம் எங்கே செல்கிறது என்று தெரியவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஐஸு கட்டியிருந்த வேஷ்ட்டியை முழங்கால் வரை தூக்கி சரி செய்து கொண்டிருக்கிறார் நிக்‌சன். இதெல்லாம் பார்க்கும்போது தவறாக தெரியவில்லையா என ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், ஒரு போன் போட்டா போதும், பிக்பாஸ் வீட்டை போய் நொறுக்கிவிட்டு வந்து விடுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு எத்தனை நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு வெளியிட்ட பட்டியல்!

“இந்த நிகழ்ச்சி மூலம் தவறான கலாசாரத்தை புகுத்துகிறார்கள். ஆபாச உடைகளை பெண்கள் அணிகிறார்கள். பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் சிலர் பேசும் தலைப்புகளே மிகவும் மோசமாக இருக்கிறது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ராஜேஸ்வரி பிரியா, “விசித்ரா ஆரம்பத்தில் இருந்தே பிரதீப்பை பற்றியும் அவர் பேசும் வார்த்தைகளை பற்றியும் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடம் சொல்லிக் கொண்டுதான் இருந்தார். ஒரு சமயம் விசித்ராவிடமே பிரதீப் ‘யார் கூடயாவது படுக்கனும் போல் இருக்கிறது’ என்று கூறினாராம். இதை அப்பவே பெரிய பிரச்சினையாக மாற்றி அன்றைக்கே பிரதீப்பை வெளியே அனுப்பியிருந்தால் இன்று கமல் சொல்லுவதற்கு தகுதி இருந்திருக்கும். ஒரு தவறை தண்டிக்கக் கூடியவராக இருந்தால் அதை விட்டுக் கொடுத்து போகமாட்டார்கள். சிறிய தண்டனையாவது  கொடுப்பார்கள். மன்னிப்பு கூட கேட்க சொல்லுவார்கள்.” என்றும் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios