திமுகவின் உயர்நிலை செயல்திட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட கனிமொழி தனது தாயார் ராஜாத்தி அம்மாளை துப்பாகி முனையில் ஒரு ஆசாமி மிரட்டுவதை பற்றி தகவலறிந்து அலறி அடித்து கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

 சொத்து குவிப்பு வழக்கு பிரச்சனை ஒருபுறம், யார் முதல்வர் என்ற பிரச்சனை மறுபுறம், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்ட பரபரப்பு ஒரு புறம் என இருக்க இந்த கூட்டத்தில் இன்று கனிமொழி கலந்து கொண்டார். 

அவர் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் தாயார் ராஜாத்தி அம்மாளிடமிருந்து போன் வர ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு பதறி அடித்துகொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் , கனிமொழி , அவரது மகன் ஆதித்யா , பணிப்பெண்கள் இருவர் மயிலாப்பூர் CIT காலனி பிரதான தெருவில் வசித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் இல்லம் எனபதால் எந்நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உண்டு. 

இந்நிலையில் இன்று மதியம் கனிமொழி கூட்டத்திற்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன் மேல் மாடிக்கு சென்று மாடியில் தங்கியிருந்த இரண்டு பணிப்பெண்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டி பதுக்கி வைத்திருந்துள்ளான்.

கனிமொழி சென்ற சிறிது நேரம் கழித்து இரண்டு பணிப்பெண்களையும் காணவில்லையே என்று மாடிக்கு தேடி சென்றுள்ளார் ராஜாத்தி அம்மாள். அந்த வீடு மாடியில் பல அறைகள் மற்றும் கிரமத்தில் இருப்பது போல் தாழ்வாரம் கொண்ட வீடு. 

பணிப்பெண்களை தேடி ராஜாத்தி அம்மாள் சென்றவுடன் அவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டிய ஆசாமி நகை பணத்தை கொண்டு வந்து தரும்படி கேட்டுள்ளான்.

இதனால நிலை குலைந்து போன ராஜாத்தி அம்மாள் அவனிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் மசியாத அவன் பணம் நகைகளை தராவிட்டால் இரண்டு பணிப்பெண்களையும்சுட்டுகொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளான். 

பணம் நகைகள் கீழே பீரோவில் உள்ளது என்று ராஜாத்தி அம்மாள் கூறியுள்ளார். போய் எடுத்து வா, எதாவது செய்தால் இவர்களை கொன்று விடுவேன் என்று கீழே அனுப்பியுள்ளான்.

கீழே பதைபதைப்புடன் ஓடி வந்த ராஜாத்தி அம்மாள் பேரன் ஆதித்தியாவிடம் சொல்லி கனிமொழிக்கு தகவல் சொல்ல சொல்லிவிட்டு நைசாக வாசலில் நின்ற போலீசாரிடம் விபரத்தை கூற போலீசார் அதிரடியாக மேலே நுழைந்து துப்பாக்கி முனையில் அந்த ஆசாமியை பிடித்துள்ளனர்.

அவனை பிடித்து அபிராமபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவன் பெயர் பிரசாந்த் என்பதும், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவன் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கனிமொழி ராஜ்ய சபா எம்பி எனபதால் வந்தவன் திருடும் நோக்கத்துடன் வந்தவனா வேறு நோக்கத்துடன் வந்தானா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.