Asianet News TamilAsianet News Tamil

வாலிபரின் தலை துண்டித்து பாலத்தில் வைப்பு! விருதுநகரில் பயங்கரம்! உடலை தேடும் போலீஸ்! நடந்தது என்ன?

இராஜபாளையம் அருகே முடங்கியாற்று பாலத்தில் இன்று காலை தலை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடேன போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

Rajapalayam private company security brutal murder tvk
Author
First Published Aug 13, 2024, 5:32 PM IST | Last Updated Aug 13, 2024, 5:32 PM IST

ராஜபாளையம் அருகே ஆணின் தலையை துண்டித்து பாலத்தின் மீது வைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் அய்யனார் கோவில் செல்லும் வழியில் முடங்கியாறு பாலம் உள்ளது. இப்பகுதியில் அதிகாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், முடங்கியாற்று பாலத்தில் இன்று காலை தலை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடேன போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: சென்னையில் ரவுடிகளை வெறித்தனமாக வேட்டையாடும் போலீஸ்! அதிகாலையிலேயே துப்பாக்கி சத்தம்! அலறும் தலைநகர்!

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாலத்தின் மீது வைக்கப்பட்டு இருந்த தலையை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? எதற்காக கொலை நடந்தது?  என விசாரணை நடந்தது.  விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சுந்தர்ராஜபுரம் பகுதியியை சேர்ந்த காவலாளி பூவையா(45) என்பது தெரியவந்தது. பூவையா தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த நிலையில், அவருடன் பணியாற்றி வந்த சக ஊழியரால் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

இதையும் படிங்க:  என்ன நடிப்புடா சாமி! தாலி கட்டிய புருஷனை கொலை செய்த மனைவி! எதற்காக? சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

இதனையடுத்து, பூவையாவுடன் பணியாற்றி வந்த காவலாளி பாலமுருகனை கைது செய்து விசாரணை கொண்டதில்  முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது. மேலும், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் புதைக்கப்பட்ட உடலை தேடி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios