rain will we so high in tamilnadu

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. 

வானிலை ஆய்வு மையம்

வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டு உள்ளது. 

வங்க கடல் பகுதியில் மணிக்க 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த தரை காற்று வீசும் என்றும், நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் மலை பகுதியில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மதிய வேளையில்,வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.