rain will not be there for 2 more weeks

தென்மேற்கு பருவ மழை முடிவடைய உள்ள நிலையில், அடுத்து வரும் சில நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த 3 மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மட்டும் அல்லாது தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,வடகிழக்கு பருவ மழை வரும் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதிக்குள் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

மேலும்,வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை,வலுவிழந்து உள்ளதால்,தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே வேளையில் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது 

இதுவரை தமிழகம் முழுவதும் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக பெய்து வந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய நீரால் பெரும்பாலான ஏரிகளில் நீர் நிரம்பியது.கிணற்றில் தண்ணீர் அதிகரித்து உள்ளது. 
பாசனத்திற்கு தேவையான தண்ணீர் தற்போது கிடைத்துள்ளது என்பதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போதைக்கு மழை வர வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.