சென்னையில் சில்லென்ற மழை...!

தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து  உள்ளது

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது உள்ளத்தால், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பலத்த மற்றும் மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது

மேலும், தென் தமிழகத்தை பொறுத்தவரையில், தெற்கு நோக்கி மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சென்னை மற்றும் வட தமிழகத்தின் அநேக இடங்களில், மலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து பல நாட்களாக வெயிலில் வாடி வந்த சென்னை மக்களுக்கு இன்று மாலை சில்லென்ற மாலையாக மாறி விட்டது.இதனால் சென்னை வாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்கின்றனர்.