தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், மற்ற இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

மேலும்,வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் 10 செ.மீ., செஞ்சியில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .