RAIN WILL BE CONTINOUS FOR ONE MORE MONTH

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து உள்ளது.இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மேலும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வட கிழக்கு பருவ மழையை பொறுத்தவரை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 1O ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இதுவரை பெய்த மழையின் அளவு 24 செ.மீ. இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும், புதுவை காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது

உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரையில் இடைவெளிவிட்டு மழை பெய்யும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக குமரி மாவட்டம் தக்கலையில் 5 செ.மீ, மைலாடியில் 4 செமீ மழையும் பதிவாகி உள்ளது

வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருவதால், இன்னும் 2 நாள் ....இன்னும் 2 நாள்...இப்படியே ஒரு மாதத்திற்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது