Asianet News TamilAsianet News Tamil

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களை சூழ்ந்துள்ள மழை நீர்.! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இரவு முழுவதும் மழை கொட்டி வரும் நிலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மாற்று ஏற்பாடுகளை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 

Rain water surrounds the metro station
Author
First Published Dec 4, 2023, 8:03 AM IST

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் சூறாவளி  காற்றோடு கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் நம்பிய பொதுமக்களுக்கு தற்போது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  அந்த அளவிற்கு மழை நீர் தேங்கி மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

1. செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ நிலையத்தை சுற்றி 4 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மெட்ரோ நிலையத்திற்குள் நுழைவதற்கான வழியானது துண்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த நிலையத்தை தவிர்த்துவிட்டு ஆலந்தூரில் ரயில்களில் ஏறுமாறு அறிவுறுத்தப்படுவதாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

Rain water surrounds the metro station

2. இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் தண்ணீர் புகுந்து, தொடர்ந்து பம்பிங் செய்தாலும் உயர்ந்து வருகிறது. தற்போது பார்க்கிங் பகுதியில் 4 அடி நீர்மட்டம் உள்ளது. சில இரு சக்கர வாகனங்களை உரிமையாளர்கள் விட்டுச் சென்றுள்ளனர். 3. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் முன்புறம் உள்ள சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ரோகினி தியேட்டர் பக்கத்திலிருந்து ஃபுட் ஓவர் பிரிட்ஜ் மூலம் ரயில் நிலையத்தை அணுகலாம் என தெரிவித்துக்கொள்ளப்பட்டுள்ளது.  

Rain water surrounds the metro station

4. அரும்பாக்கம் ஸ்டேஷன் அருகே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தை அணுகுவதில் சிரமம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  5. மற்ற மெட்ரோ ரயில் நிலையங்கள் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், தெரு மட்டத்தில் மட்டுமே சிறிய நீர் தேங்கி நிற்கிறது. 5. புயல் பாதிப்பு இருந்தாலும் ரயில் சேவைகள் வழக்கமாக காலை 5 மணிக்குத் தொடங்கியுள்ளன. 6. பயணிகள் தங்கள் பயணங்களை அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios