rain water enters karunanidhi house

சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று மாலை 3 மணிக்குப் பிடித்த மழை, கன மழையாகப் பெய்து வருகிறது. இதனால் பெருமளவில் சாலைகளில் தண்ணீர் தேங்கின. 

குறிப்பாக சென்னை அண்ணாசாலையை ஒட்டிய பகுதி, போயஸ் கார்டன் பகுதி, கோபாலபுரம், மயிலாப்பூர், சிஐடி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் தண்ணீர் பெருக்கெடுத்தது. 

மயிலாப்பூரில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் வடிகால் வாரிய பாதையில் நீர் அடைப்பு ஏற்பட்டு மேலும் தண்ணீர் பெருகியுள்ளது. மேலும் கோபாலபுரம் பகுதியில் வெள்ள நீர் பெருகியது. இதனிடையே கோபாலபுரத்தில் உள்ள திமுக., தலைவர் கருணாநிதி வீட்டின் முன் பகுதியிலும் தண்ணீர் பெருகி, வீட்டினுள் சென்றது.