அடுத்த 48 மணி நேரத்தில்‌ தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்‌ தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”கேரளம்‌ மற்றும்‌ அதையொட்டிய தமிழக பகுதிகளில்‌, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால்‌, நீலகிரி முதல்‌ கள்ளக்குறிச்சி வரையிலான 16 மாவட்டங்களில்‌ இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்‌, சென்னையில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்‌, அதிகபட்சம்‌ 36 டிகிரி செல்சியஸ்‌ வெப்பநிலை பதிவாகும்‌.

அதேபோல, தென்‌ மாநிலங்களையொட்டிய அரபிக்கடல்‌, குமரி கடல்‌ மற்றும்‌ வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று வீசுவதால்‌, இன்றும்‌, நாளையும்‌ இந்த பகுதிகளுக்கு மீனவர்கள்‌ செல்ல வேண்டாம்‌.

இந்நிலையில்‌, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த வரக்கூடிய 48 மணி நேரத்தில்‌ தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசான மழைக்கும்‌, ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யக்கூடும்.

மேலும்‌, வருகிற 21-ஆம்‌ தேதி முதல்‌ இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும்‌ என கூறப்பட்டுள்ள நிலையில்‌, 23 ஆம்‌ தேதி முதல்‌ மீண்டும்‌ மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்‌ தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: Tomato price :ஷாக்!! சதமடித்த தக்காளி.. விலை உயர்வு காரணம் இதுதான்..! வியாபாரிகள் கூறுவது என்ன..?