தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை  வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி  நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரம், விழுப்புரத்தில் தலா 9 செ.மீ, பரங்கிப்பேட்டை, கடலூரில் தலா 8 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய மிதமான  மழை பெய்து  வருகிறது. அதில் குறிப்பாக கோயம்பேடு, தி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை தொடர்ந்து நீடித்து வருகிறது.