rain is possible today

தென்மேற்கு பருவ மழை முடிவடைய உள்ள நிலையில், அடுத்து வரும் சில நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த 3 மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மட்டும் அல்லாது தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,வடகிழக்கு பருவ மழை வரும் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதிக்குள் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வட தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது