Rain increases in 2 days - Chennai Weather Research Center
வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வழக்கத்தைவிட அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெற்றது.
தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக, தமிழகத்துக்கு சற்று ஆறுதல் அளித்தது என்றே கூறலாம்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த முறை வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை வரும் இரண்டு நாட்களுக்கு மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
