தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

மேலும், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்‌படும்‌. மாலை அல்லது இரவு நேரங்க‌ளில் மழை பெய்ய வாய்ப்‌பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.