சென்னையில் இன்று காலை 9 மணிக்கே சுட்டெரிக்கும் வெய்யில் மக்களை வாட்டி எடுத்த நிலையில், மாலை 5 மணி அளவில் இலேசான காற்றுடன் திடீர் என குளு குளு மழை பெய்தது. 

இந்த திடீர் மழையால், வெட்பம் தனித்து குளுமையான சூழல் நிலவுவதால் சென்னை வாசிகள் இதை அனுபவித்து வருகின்றனர்.

மழை பெய்த இடங்கள்:

தற்போது வரை, சென்னையை சுற்றியுள்ள பகுதிகளான, சைதாப்பேட்டை, வளசரவாக்கம், குரோம்பேட்டை, வடபழனி, எழும்பூர், புரசைவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

போக்குவரத்து நெரிசல்:

மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால், கல்லூரி வாகனங்கள், பள்ளி வாகனங்கள், வேலை முடித்து வருபவர்கள் அதிகம் வந்து செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைகாரணமாக போக்கு வரத்து போலீசார் வாகனங்களை சீர் படுத்த சற்று தாமதம் ஆகியது.

வடமாநிலத்தில் மழை:

தமிழகம் இன்றி வட மாநிலங்களிலும் பல பகுதிகளில் கனமழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் ஏற்கனவே நிரம்பி வழியும் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைக்கு கூடுதல் நீர் வர வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.