தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட மிகக் குறைவாக மழை பெய்து வருகிறது. இதனால், அணை, ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதனைதொடர்ந்து, சென்னை எழும்பூர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலையில் கன மழை பெய்தது.

இந்நிலையில், குமரி கடல் பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தெற்கு கோவா கடலோர பகுதி வரை பரவி இருப்பதாகவும், இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.