தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மத்திய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக வலுப்பெற்று இந்திய பெருங்கடல் மற்றும் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். 
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.