வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை , வடகிழக்கு பருவமழை துவங்கும் முதல் காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவானது. அது தமிழ்நாட்டு கடலோர பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கு முன்னர் உருவான இரண்டு காற்றழுத்த நிலைகளும் நம்மை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்ட நிலையில் நிச்சயம் சென்னை நாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் விதத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. 

காற்றழுத்த தாழ்வு நிலை , காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக இன்று அல்லது நாளை மாறலாம். இதனால் நாளை (டிச.1) காலை முதல் நாகையிலிருந்து சென்னை வரையிலான கடலோர மாவட்டங்கள் கனமழையை சந்திக்கும்.

டிச 1 அல்லது 2 ஆம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாகப்பட்டினம் சென்னை இடையே கரையை கடக்கும் . அதாவது கடலூரை நோக்கி போகும். அந்த நேரத்தில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் கடலோர மாவட்டங்கள் அதிக மழையை சந்திக்கும். கடந்த ஆண்டு டிச 1 பெய்த பேய் மழையை நினைத்து இந்த ஆண்டும் அதுபோல் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்று யாராவது வதந்தி கிளப்பினால் நம்ப வேண்டாம்.

அது போன்று எதுவும் நடக்காது. அதிகமான மழை இருக்கும். சென்னை முதல் நாகை வரையிலான கடலோர மாவட்டங்களில் கடுமையான் மழை இருக்கும். 

கடலூர் பாண்டிச்சேரியிலும் கடுமையான மழை இருக்கும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை இருக்கும் . டிச . 2 அன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை இருக்கும் . 2 மற்றும் 3 தேதிகளில் காற்றழுத்தம் அரபி கடலை நோக்கி நகரும் இதனால் கோவை , நீலகிரியில் , குன்னூரில் அதிக அளவு மழை இருக்கும். 

சென்னையில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மழை கனமழை இருக்கும் உணவுகளை சேமித்து வைத்துகொள்ளுங்கள் , வெள்ளம் வரும் போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் .