Rain for the next 4 days from today! Weather Center Cool information

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் இன்னும் ஆரம்பிக்காத நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தொட்டுள்ளது. இதனால், பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டினுள் முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஜில் அறிக்கையை தெரிவித்துள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு மழை இருக்கும்
என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருத்தணி, வேலூர், தருமபுரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று வெப்பம் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் சென்னையில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 29 முதல் மே 2 வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.