வறட்சி பாதித்த தமிழகத்தை குளிர்விக்குமா மழை?... காற்றழுத்த தாழ்வு நிலையால் ஜனவாி 20 முதல் மழைக்கு வாய்ப்பு!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தாய்லாந்து அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 20 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதன் காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளனர். வடகிழக்கு பருவமழை காலமும் முடிந்துவிட்டது. 

இந்த நிலையில் தாய்லாந்து அருகே புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. தாய்லாந்து வளைகுடா பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி மேற்கு திசையில் நகர்ந்து வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக வரும் ஜனவரி 20-ம் தேதி முதல் 26-ம் தேதிக்கு உட்பட்ட நாட்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

முதலில் கடலோர மாவட்டங்களில் தொடங்கும் மழை, பின்னர் படிப்படியாக உள் மாவட்டங்களில் பெய்யத் தொடங்கும்.

இந்த மழை தமிழகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து செல்லும் என்றும் வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.