கட்டுகட்டாக 2000 ரூபாய் கரன்சி நோட்டுகளை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். விமான நிலையத்தில் சிக்கியது 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சென்னை விமான நிலையத்தில் புதிய 2000 ரூபாய் கரான்சி நோட்டுகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைய்டுத்து அவர்கள் நடத்திய திடீர் சோதனையில் 5 பேரை பிடித்தனர்.

அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனியிட்டபோது அதில் காக்கி கவர்களில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அத்தனையும் தற்போது வெளிவந்துள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஆகும். 

அதை கைப்பற்றிய அதிகாரிகள் அதை கணக்கிட்டபோது ரூ.1.34 கோடி ரூபாய் இருந்தது. இது பற்றி பணத்தை கடத்திய 5 பேரிடமும் வருவாய் புலனாய்வு நுண்ணறிவு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் யாரிடமிருந்து இந்த பணத்தை பெற்றார்கள் , எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பது போன்ற விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

கரன்சிகளின் எண்ணை கொண்டு அது எந்த வங்கியில் பெறப்பட்டது என்பது பற்றி கணக்கெடுத்து அதன் மூலம் அந்த வங்கியின் அதிகாரிகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன் மூலம் பலர் சிக்க வாய்ப்பு உள்ளது.