Radharavi who attacks Vishal hard

புரட்சி பண்ணலாம் என்று புரட்சி தலைவர் மாதிரி நினைச்சார்னா அது ரொம்ப தப்பு என்று நடிகர் விஷால் குறித்து நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

திமுக பேச்சாளர் ராதாரவியிடம், வார இதழ் ஒன்று பேட்டி எடுத்தது. விஷால் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்தீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், விஷால் அரசியலுக்கு வருவார்னு எனக்கு எப்பவோ தெரியும். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் தேர்தலில் ஜெயிச்சார்னு சொல்றாங்க. அந்த சின்ன தேர்தல்லேயே வெறும் 150 ஓட்டு வித்தியாசத்துலதானே ஜெயிச்சாங்க... அதுக்கே வண்டி இழுக்க மாட்டேங்குது. மூன்று லட்சம் ஓட்டு, எப்படிங்க போடுவாங்க? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசும்போது, திமுக, அதிமுக வேட்பாளர்கள் தொகுதிக்கு வந்து பேசினால் மக்கள் கேட்பாங்க... விஷால் வந்து பேசினால் மக்கள் பார்ப்பாங்க அவ்வளவுதான் என்றார்.

ரசிகர்கள் நிறைய பேர் இருக்காங்க... புரட்சி பண்ணலாம்னு புரட்சி தலைவர் மாதிரி நினைச்சார்னா அது ரொம்ப தப்பு. ஒவ்வொரு விஷயத்துலயும் ஆர்வமிகுதியில் முன்னப்போய் நிக்கிறார். அவருடைய எல்லா நடவடிக்கைகளையுமே பார்த்துட்டுதானே இருக்கோம் என்று கூறினார்.

விஷால் எப்பவு நுனிப்புல் மேய்கிறவர். எதையும் முழுசா முடிக்கமாட்டார் என்றும் அவர் படம் ரிலீஸாகுற நேரத்துல மட்டும் திருட்டு விசிடி பத்தி பேசுவார்... அப்புறம் மறந்துடுவார் என்றும் நடிகர் ராதாரவி காட்டமாக அந்த கூறியுள்ளார்.