quarrel between police and reportes in egmore court
அந்நிய செலாவணி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான டிடிவி தினகரன் வெளியே செல்லும் போது செய்தி சேகரிக்க விடாமல் காவல்துறையினர் செய்தியாளர்களை தள்ளியதில் போலீசாருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்கு வாதம் நடைபெற்றது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.
1996 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து தொலைகாட்சி மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் வாங்கியதி மொசடி செய்ததாக தற்போதைய அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக ஏழு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இரண்டு வழக்குகளில் இருந்து டிடிவியை நீதிமன்றம் விடுவித்தது. அதன்படி இன்னும் ஐந்து வழக்குகள் தினகரன் மீது நிலுவையில் உள்ளது.
இதுகுறித்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் டிடிவி தினகரன் ஆஜரானார்.

பின்னர், வெளியே வரும்போது தினகரனிடம் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் முயன்றனர். அதற்கு மறுப்பு தெரிவித்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
