“கொழு கொழு பூனைகளாம் தமிழக எம்.பிக்கள்“ - ட்வீட் போட்டு உசுப்பேத்தும் சுப்ரமணிய சுவாமி...!

தடையை  மீறி ,  ஜல்லிகட்டு நடத்தினால், தமிழகத்தில் ஆட்சியை கலைத்து , குடியரசு ஆட்சி  அமல்படுத்த  வேண்டும்  என  ட்வீட்   செய்திருந்தார்  சுப்ரமணிய  சாமி .இதற்கு  கடும்  எதிர்ப்பை  வெளிப்படுத்தி,  அவருக்கு  ரீ ட்வீட்  செய்திருந்தனர்  பல  ஜல்லிக்கட்டு  ஆதரவாளர்கள்.

இவ்வாறு பதில் அளித்த ஜல்லிக்கட்டுஆதரவாளர்களில் ஒருவர்,“ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவாக சட்டம் இயற்ற முடியாத நீங்கள் எதற்கு எம்.பி பதவியில் இருக்கீங்க ? ராஜினாமா செய்து விடுங்கள் என கூறி இருந்தார்.

மற்றொருவர்  நீங்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு  உள்ளீர்கள் ஆனால், ஜல்லிகட்டுக்கு  ஆதரவாக  இல்லையே? என  கேள்வி எழுபியுள்ளார்.

சுப்ரமணிய சுவாமியின்  பதில்:

''நான் ஒன்றும் தமிழகத்திலிருந்து எம்.பி.,யாகவில்லை. நாடாளுமன்றத்துக்கு நீங்கள் தேர்வு செய்து அனுப்பி இருக்கும்  39 ''புஸ்ஸி கேட்'' எம்.பி.,க்களிடம் போய் கேளுங்கள்'' என பதிலளித்துள்ளார்.

இதற்கு மற்றொரு  ஜல்லிக்கட்டு ஆதரவாளர் ரீ  ட்வீட் செய்துள்ளார் .

'நீங்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படவில்லை. அப்புறம் ஏன் தமிழக பண்பாட்டு விஷயத்தில் தலையிடுகிறீர்கள்'' என்று கேள்வி எழுப்பி  இருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவாக  இல்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால், ஜல்லிக்கட்டுக்கு   ஆதரவு  தெரிவிக்கும் ஒட்டுமொத்த  தமிழர்களையும்,  காயப்படுத்தும்  விதமாக அவர்  ட்வீட்  இருக்கிறது  என்பதில்  சந்தேகமே  இல்லை.