Asianet News TamilAsianet News Tamil

இனி ஆன்லைனில் கொள்முதல்... மழையால் நெல் வீணாவதை தடுக்க அரசு சூப்பர் ஏற்பாடு!!

ஆன்லைன் வழியே நெல் கொள்முதல் செய்யப்படும் எனவும் ஆன்லைனில் பதிவுசெய்ய  விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு நிலையங்களிலும் தனி ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

purchase of paddy online to prevent wastage of paddy due to rains
Author
Tamilnadu, First Published Jan 19, 2022, 7:55 PM IST

ஆன்லைன் வழியே நெல் கொள்முதல் செய்யப்படும் எனவும் ஆன்லைனில் பதிவுசெய்ய  விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு நிலையங்களிலும் தனி ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், மேட்டூர் அணையின் நீரை நம்பி பாசனம் செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக, பல லட்சம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் தொடர் மழையால் விவசாயிகளுக்குக் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதையும் தாண்டி எஞ்சிய விளைச்சலை அறுவடைக் காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில், நிலையங்களுக்கு வெளியே வேதனையோடு கொட்டி வைத்துள்ளனர். நெல்மணிகள் மழையில் நனைந்து முளைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் கடுமையாக உழைத்த விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. தானியங்களும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

purchase of paddy online to prevent wastage of paddy due to rains

முப்போகம் ஒரு போகமாவிட்டது. ஒருபோக சாகுபடிக்கே விவசாயிகள் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சம்பா அறுவடை தொடங்கும் டிசம்பர் மாதத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா, தாளடி என சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்கிறது. டெல்டா மாவட்டங்களில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது வரை திறக்கப்பட்டுள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகள் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது ஒருபுறம் என்றால் விவசாயிகள் தங்களுடைய நெல்லை விற்க ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த குறுவை சாகுபடியின் போது இந்த முறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

purchase of paddy online to prevent wastage of paddy due to rains

ஆனால் நடைமுறைச் சிக்கல்களால் கைவிடப்பட்டது. ஆன்லைன் பதிவு வாயிலாக விற்பது விவசாயிகளுக்கு சிறப்பானதாக இருக்கும் என அரசு நினைக்கிறது. ஆனால் அதில் இருக்கும் சில நடைமுறை சிக்கல்களை அரசு கண்டுகொள்வதில்லை என விவசாயிகள் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது. ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்வதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றார். ஆனால் இதுகுறித்து விஏஓவிடம் விவசாயிகள் சென்று கேட்டால், தங்களுக்கு  அரசு உத்தரவு எதுவும் வரவில்லை என்றனர். இதனால் என்ன செய்வது என்றே தெரியாத குழப்பத்தில் இருப்பதாக விவசாயிகள் கவலையுற்றுள்ளனர். இதனிடையே அவ்வப்போது மழை வேறு பெய்வதால் நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளன. எனவே ஆன்லைன் முறையை ரத்து செய்து, பழைய முறைப்படியே கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக ஆன்லைனில் பதிவுசெய்ய  விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு நிலையங்களிலும் தனி ஊழியர்களை நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios