ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று இரவு 10.07 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை செலுத்துவதற்கான 32 மணி நேரம் 37 நிமிடங்களுக்கான கவுண்ட் டவுன் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. 

இங்கிலாந்து நாட்டின் நிலப்பரப்பை ஆய்வு செய்யவும், புவி கண்காணிப்பு, மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பயன்பாட்டுக்காக நோவாசார் மற்றும் எஸ் 1-4 என்ற இரு செயற்கைக்கோள்கள் இரவு 10.07 மணி்கு பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. வணிக நோக்கில் இந்த இரு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படுகிறது. 

நோவாசார் செயற்கைக்கோள் காப்பாடு காடுகளை அளவை கண்காணித்தல், புவி ஆய்வு, வெள்ளம் மற்றும் பேரிடர் கண்காணிப்பு, கப்பல், கடல்வவி போக்குவரத்தை கண்காணித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுகிறது. அதேபோல எஸ்-1-4 செயற்கைக்கோள் நாட்டின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகர்புற மேலாண்மை, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை கண்காணிக்க பயன்படுகிறது. 

இந்த இரு செயற்கைக்கோள்களும் படங்களை துல்லியமாக கண்காணிக்கும். நோவாசார் செயற்கைக்கோள் 445 கிலோஎடையும், எஸ்1-4 செயற்கைக்கோள் 444 கிலோ எடையும் கொண்டதாகும். புவியில் இருந்து 583 கி.மீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் இரு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட உள்ளன.