சென்னையில் இருக்கும் போலிஸ் எல்லாம் சேப்பாக்கத்தில் இருப்பார்கள் அதனால மெரினா பீச் பெசன்ட் நகர் பீச்களை மாலை 7 மணி அளவில் ஆக்ரமிக்க போவதாக இளைஞர்கள் தகவல். ஜல்லிக்கட்டு போராட்ட களமான மெரினா கடற்கரையை கைப்பற்ற அருமையான வாய்ப்பு... ஒட்டுமொத்த காவல் துறையும் சேப்பாக்கம் மைதானத்தில் குவிக்கபட்டுள்ளதால் காவல் துறை கெடுபிடியின்றி அமைதியாக இருக்கும் மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையை கைப்பற்றி காவிரி காக போராடுவோம் என கருத்து பரவி வருகிறது. போராட்டக்காரர்கள் எச்சரிக்கையால் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள சேப்பாக்கம் பகுதிகளிலும், கிரிகெட் வீரர்கள் தங்கியுள்ள தனியார் ஹோட்டல்களும் போலிசின் கட்டுப்பட்டிற்குள் வந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு கருத்து உலாவுகிறது.

போலீஸ் கண்காணிப்பில் சென்னை சேப்பாக்கம் பகுதி கொண்டுவரப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் மட்டும் இன்றி அனைத்து சாலைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சி.எஸ்.கே அணி வீரர்கள் தங்கி உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலுக்கு தீவிரபதுகாப்பு போடப்பட்டுள்ளது.  கொல்கத்தா அணி வீரர்கள் தங்கியுள்ள எழும்பூர் ராடிசன் புளூ ஓட்டலுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமருக்கு இணையாக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  போராட்டக்காரர்கள் எச்சரிக்கையால் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள சேப்பாக்கம் பகுதிகளிலும், கிரிகெட் வீரர்கள் தங்கியுள்ள தனியார் ஹோட்டல்களும் போலிசின் கட்டுப்பட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கிரிகெட் வீரர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் இன்று மாலை, தாங்கள் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து மைதானத்திற்கு சொகுசு பஸ்களில் அழைத்துவரப்படுவார்கள்.

வீரர்கள் வரும் பஸ்களுக்கு, முன்னும், பின்னும் போலீஸ் வாகனங்கள் அணிவகுக்க உள்ளன. வீரர்கள் செல்லும் சாலைகளில் வேறு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது முதலே, கிரிக்கெட் வீரர்கள் செல்லும் பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது இந்தியாவிலும் வழக்கமாக இருந்து வருவதுதான். ஆனாலும், இதுவரை இல்லாத அளவிற்கு இம்முறை பிரதமருக்கு இணையான உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

மெரினா கடற்கரை சாலையும் காவல்துறையினரின் கட்டுப்பாடு காரணமாக வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் தடுத்து நிறுத்தப்பட்டு பலத்த சோதனை, விசாரணைக்குப் பிறகே சேப்பாக்கம் சாலைகளில் விடுகின்றனர். எழும்பூர் முதல் சேப்பாக்கம் வரை அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு நிலவுகிறது. வரலாறு காணாத பாதுகாப்புடன் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், சமூகவளைதலங்களில் ஒரு கருத்து பரவி வருகின்றது. அதாவது என்னன்னா சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்களும், அமைப்புகளும் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபடுவதாக வலைதளங்களில் கருத்து பரவுகின்றன.

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த கிரிகெட் போட்டியை எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க 4௦௦௦ போலிசாரின் மொத்த கவனமும் கிரிக்கெட் மைதானத்தை சுற்றியும், வீரர்களின் மீதும் தான் இருக்கும் எனவே, அந்த நேரத்தில் மெரினாவில் கூடி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு கூடியதைப்போல மீண்டும் ஒரு மெரீனா போராட்டத்தை உருவாக்க இருப்பதாக வலைதளங்களில் “நாங்க குறி வச்சது சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு  இல்ல... எங்க நோக்கமே மெரினா தான்" என ஒரு கருத்து பரவி வருகிறது. இது எப்படி நடக்கும்? என்ன நடக்கும்? போகப் போகத் தெரியும்...