Asianet News TamilAsianet News Tamil

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தினகரன் தலைமையில் போராட்டம்; ஒரு இலட்சம் பேர் பங்கேற்பார்களாம்...

protest led by Dinakaran against neutrino project A lakhs people participants ...
protest led by Dinakaran against neutrino project A lakhs people participants ...
Author
First Published Apr 12, 2018, 8:49 AM IST


தேனி
 
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டி.டி.வி. தினகரன் தலைமையில் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதில் ஒரு இலட்சம் பேர் பங்கேற்பர் என்றும் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம், தேவாரம் அடுத்துள்ள அம்பரப்பர் மலையில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அம்பரப்பர் மலையை, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நேற்று மாலை பார்வையிட்டார். 

அதனைத் தொடர்ந்து டி.புதுக்கோட்டை, பொட்டிப்புரம், ராமகிருஷ்ணபுரம் ஆகிய கிராம மக்களை சந்தித்த்ப் பேசினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "தமிழகத்தை வஞ்சிக்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மத்திய அரசின் ஏஜென்டுகளாக செயல்படுகின்றனர். 

நியூட்ரினோ ஆய்வு மையத்தை மத்திய அரசு ஏன் குஜராத் மாநிலத்தில் தொடங்கவில்லை. மக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். 

எனவே, அ.ம.மு.க. சார்பில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் பொட்டிப்புரத்தில் விரைவில் போராட்டம்  நடத்தப்படும். 

இந்தப் போராட்டத்தில் ஒரு இலட்சம் பேர் கலந்து கொள்வார்கள். இந்த திட்டத்தை கைவிடும்வரை எங்களது போராட்டம் தொடரும்" என்று அவர் கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios